பிரமாண்ட பொருட் செலவில் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிறது மெர்சல். மூன்று நாயகிகள், மிரட்டலான வில்லன், ஆஸ்கர் நாயகன் இசை என அனைத்திலும் பிரமாண்டம் என்று தான் சொல்லணும். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி தமிழ் சாதனையை நெருங்கி கொண்டு இருக்கிறது.

ராஜா ராணி, தெறி என தொடர்ந்து இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ. ஆனால், அவர் மீது தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டு அவர் படங்கள் காப்பி என்பது தான்.atlee

ராஜா ராணி மௌனராகம் படத்தின் காப்பி, தெறி சத்ரியன் படத்தின் காப்பி என்று கூறினர்,அதுமட்டுமல்ல தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் மெர்சல் படம் விஜயகாந்தின் பேரரசு, ரஜினியின் மூன்றுமுகம், கமலின் அபூர்வ சகோதரர்கள் மூன்று படத்தின் மிக்ஸிங் என சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அட்லீ ஒரு பேட்டியில் கூறியதாவது; நான் மற்ற படங்களை பார்த்து காப்பி அடிக்குறேனா? இது சுத்தப்பொய் ஒரு கதையை உருவாக்க நாங்கள் எப்படி போராடுகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? ஒரு அறையில் அமர்ந்து கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் உழைப்பு தான் ஒவ்வொன்றும் என கூறியுள்ளார்.

இதற்கு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அட்லீ விளக்கம் அளித்துள்ளார்.இதில் இவர் பேசுகையில் ‘இசையில் மொத்தமே 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதில் தான் மாற்றி மாற்றி இசையமைக்க முடியும். இன்னும் பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் இருக்கும்.

என்னை காப்பி என்று சொன்னவர்களுக்கு “மெர்சல்” படத்தில் வரும் ஒரு காட்சியை பார்த்து விட்டு சொல்லுங்கள் எங்கள் உழைப்பு என்ன என்று தெரியவரும். அதே போல என் திறமை, நான் யார் என்று சாவல் விடுத்துள்ளார்.

மேலும், மெர்சலில் வரும் காட்சிகள் ரசிகர்களை மெர்சலாக்கும் இதுவரை இப்படி ஒரு காட்சி வந்தது இல்லை என்று பேசும் அளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆக மொத்தத்தில் தளபதி ரசிகர்கள் மெர்சலாவப்போவது உறுதி!

மேலும், காப்பி அடிக்கின்றேன் என்று சொல்வது எளிது, ஆனால், அந்த படத்திற்காக நான் எத்தனை கஷ்டப்படுகின்றேன், ஒரு விஷயத்தை இந்த ட்ரெண்டிற்கு ஏற்றவாறு எப்படி எடுக்கின்றோம் என்பதில் ரிஸ்க் அதிகம்.

நானும் எல்லோர் போலவும் உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்’ என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

தீபாவளிக்கு வரும் மெர்சல் படத்தை பொறுத்திருந்து பார்ப்போம்.