திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ரஜினி இல்லாமல் நடக்கும் கூலி பட சூட்டிங்.. பட்டி, டிங்கரிங் பண்ண பிளான் போட்ட லோக்கி!

Coolie: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லாமல் கூலி படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் பணி புரிய வேண்டும் என்பது ரொம்ப ஆசை எனவும், அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும் எனவும் பேசப்பட்டது.

ஆனால் அந்த வதந்தியை முற்றிலுமாக லோகேஷ் கனகராஜ் உடைத்தார். கூலி படத்திற்கு பிறகும் ரஜினி நடிப்பார் என சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தான் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினி இல்லாமல் நடக்கும் கூலி பட சூட்டிங்

அதன் பிறகு அங்கு ஒரு மைனர் ஆப்ரேஷன் அவருக்கு நடந்ததாக கூட சொல்லப்பட்டது. தற்போது ரஜினி முழுக்க ரெஸ்ட்டில் இருக்கிறார். இருந்தாலும் படப்பிடிப்பை நிறுத்த முடியாது என்பதால் ரஜினி இல்லாத காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது எம்ஜிஎம், ஷாப்பிங் மால் போன்ற இடங்களிலும் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ரஜினியும் இருக்க வேண்டிய காட்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரஜினியால் தற்போது படபிடிப்பில் பங்கெடுக்க முடியாது, அதிலும் மக்கள் கூடும் இடங்களில் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

இதனால் முதலில் படபிடிப்பை முடித்துவிட்டு அதன் பின்னர் ரஜினியை அடிக்க வைத்து அதை சிஜி மூலம் இணைப்பதற்கான வேலைகளை பார்க்கலாம் என லோகேஷ் முடிவெடுத்திருப்பதாக வலைப்பேச்சு சேனல் தெரிவித்து இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் மே 8-ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு வைத்திருந்ததாகவும், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படமும் அதே காலகட்டத்தில் ரிலீஸ் ஆக இருப்பதால் தற்போது ரிலீஸ் தேதியை மாற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

- Advertisement -

Trending News