வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வெளியானது கூலி ரிலீஸ் தேதி.. போட்டி கமல் கூட இல்ல அஜித் கூட

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் கூலி படப்பிடிப்பில் இணைந்தார்.

தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் படம் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படமும் கஞ்சா கடத்தல் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிகிறது.

அஜித் கூட தான் போட்டியே..

படத்தில் அமீர் கான் சிறப்பு தோற்றம் என்று பிரம்மாண்டமாக எடுத்து வைத்துள்ளார்கள். இந்த படத்தின் மீது மட்டுமல்ல, மே 1-ஆம் தேதிக்கும், மக்களிடம் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மே 1-ஆம் தேதி எந்த படம் வெளியாகும் என்று எல்லோரும் எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்த நிலையில் கண்டிப்பாக அஜித் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில், போட்டிக்கு எந்த படம் வெளியாகும் என்ற கேள்வியும் உள்ளது.

முதலில், இந்த படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் புதிய படம் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த முட்டாள்தனத்தை ஒரு போதும் சிவகார்த்திகேயன் செய்யமாட்டார் என்று கூட சொல்லலாம். இந்த நிலையில், அன்று வேறு ஒரு முக்கிய தலையின் படம் வெளியாகிறது.

ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி திரைப்படமும், மே 1-ஆம் தேதி வெளியாகிறதாம். முதலில் கமலின் தக் லைப் படத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, இந்த படம் அஜித்துடன் மோதுகிறது. இதற்க்கு முன்பு 2019 ஆம் ஆண்டு இதே போல நடந்தது. தற்போது அதே போல நடப்பது, ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News