கூலி படத்தில் தலைவர் பெயர் என்ன தெரியுமா.? வெறித்தனமா வெளிவந்த போஸ்டரில் இத கவனிச்சிங்களா

Coolie: சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் ஆரவாரம் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் கூலி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் அவருடைய ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

coolie-poster
coolie-poster

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் பற்றிய விவரம் போஸ்டர் உடன் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன்படி மஞ்சுமல் பாய்ஸ் சௌபின் ஷாகீர் தயால் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா சைமன் என்ற கேரக்டரிலும் ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். அடுத்ததாக ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் இப்படத்தில் இணைந்துள்ளார்.

வைரலாகும் கூலி போஸ்டர்

மேலும் கன்னட பிரபல நடிகர் உபேந்திரா காலீசா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படியாக ஒவ்வொரு போஸ்டரும் வெறித்தனமாக இருந்தது. அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திர பெயர் என்னவாக இருக்கும் என கேள்வி கேட்டு தயாரிப்பு தரப்பு ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தது.

அதற்கு ரசிகர்கள் ஒவ்வொரு பெயரை சொன்ன நிலையில் தற்போது அவருடைய கதாபாத்திரர் பெயர் தேவா என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தான் இப்போது வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி அந்த போஸ்டரில் தலைவர் கையில் ஒரு பேட்ச் இருக்கிறது.

அதில் 1421 என்ற எண்கள் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதன் கூட்டுத்தொகை எட்டு என குறிப்பிட்டு பாட்ஷா படத்துடன் அதை கனெக்ட் செய்துள்ளனர். அதாவது 8க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா என அந்த படத்தில் பாட்டு வரும். அதை போஸ்டரோடு பொருத்திப் பார்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அது மட்டும் இன்றி தளபதி படத்தில் ரஜினி தன் நண்பன் தேவாவை உயிராக நினைத்து கொண்டாடுவார். அந்தப் பெயர் இவருடைய கதாபாத்திர பெயராக இருப்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இப்படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டர் சோசியல் மீடியாவை அதகளம் செய்து வருகிறது.

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தலைவரின் கூலி

Next Story

- Advertisement -