வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று தமிழகமெங்கும் ரிலீஸ் ஆகி நிறைய பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை பெற்று கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்கான FDFS இன்று அதிகாலை 5.30 மணிக்கு ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் இந்த படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள எல்லா தியேட்டர்களிலும் ரசிகர்கள் காலை மூன்று மணியில் இருந்தே தங்களுடைய கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். கோயம்பேடு ரோகிணி திரை அரங்கம் இன்று சிம்பு ரசிகர்களால் துவம்சம் செய்யப்பட்டது என்றே சொல்லலாம்.

Also Read:  காசுக்காக மணி ஆட்டும் கூல் சுரேஷ்.. நாட்டாமை என்று நினைத்து செய்யும் கேவலமான வேலை

10 அடிக்கு மேலான சிம்புவின் கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. 108 தேங்காய்கள் உடைக்கப்பட்டது. அதிகாலையிலிருந்தே சிம்புவின் ரசிகர்கள் அவருடைய பாடல்களுக்கு நடனமாடி கொண்டிருந்தனர். சரியாக படம் ஆரம்பிப்பதற்கு முன்பு சிம்புவின் நெருங்கிய நண்பர் கூல் சுரேஷ் ரோகிணி தியேட்டர் வந்தடைந்தார்.

வெந்து தணிந்தது காடு பட ரிலீசிற்கு சிம்புவின் மீது வைத்த எதிர்பார்ப்பை விட நடிகர் கூல் சுரேஷ் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு அதிகம். அதற்கு காரணம் கூல் சுரேஷ் இந்த படத்திற்கு செய்த ப்ரோமோஷன். கிட்டத்தட்ட ஒரு வருடம் இவர் இந்த திரைப்படத்திற்கு எங்கு சென்றாலும் ப்ரமோஷன் கொடுத்து வருகிறார்.

Also Read:  ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்

மற்ற படங்களுக்கு பணம் வாங்கி கொண்டு ப்ரோமோஷன் செய்யும் கூல் சுரேஷ் தன்னுடைய நண்பனுக்காக செல்லும் இடங்களில் எல்லாம் பிரியாகவே விளம்பரப்படுத்தினார். இன்று அவரை ரோகிணி தியேட்டரில் பார்த்தவுடன் ரோகிணி தியேட்டரில் திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. ரசிகர்கள் முண்டியடித்து அவரை பார்க்க முயற்சிக்க அவர் வந்த ஆடி காரின் கண்ணாடி உடைந்து விட்டது.

இதில் என்ன பிரச்சனை என்றால் கூல் சுரேஷ் வந்தது அவருடைய சொந்த கார் இல்லை. ஒரு யூடியூப் சேனல் ஸ்பான்சர் பண்ணிய கார். தற்போது காருக்காக அந்த காரின் கண்ணாடியை உடைந்ததற்கு 1 லட்சம் க்ளெய்ம் பண்ணி இருக்கிறார்களாம். இதனால் கூல் சுரேஷ் மன வருத்தத்தில் இருக்கிறார்.

Also Read:  GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்