குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த திடீர் மாற்றம்.. எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள்

cookwithcomali-cinemapettai
cookwithcomali-cinemapettai

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் தற்போது மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக வலம் வரும் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.

என்னதான் புதிய படங்களை போட்டு ரசிகர்களை தன்பக்கம் சன் டிவி இழுத்துக் கொண்டாலும் ரியாலிட்டி ஷோ என்று வந்துவிட்டால் நான் தான் கிங் என பல வருடமாக நிரூபித்து வருகிறது விஜய் டிவி. சீரியல்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

விஜய் டிவி தரமான தொகுப்பாளர்களை அடையாளம் கண்டு சாதாரண நிகழ்ச்சியை வெற்றி நிகழ்ச்சி ஆகிவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் அதிகம் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி(cook with comali).

சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமா என்றால் முடியும் என சாதித்து காட்டியுள்ளது விஜய் டிவி. வாரவாரம் சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் சேர்ந்து கொண்டு அலப்பறை பண்ணும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

cookwithcomali-cinemapettai-01
cookwithcomali-cinemapettai-01

ஆனால் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியை முன்னிட்டு வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பப் படவில்லை. அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் ஒளிபரப்ப அதிக வாய்ப்பு இல்லை என்கிறது விஜய் டிவி வட்டாரம்.

அதற்கு காரணம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி ஒளிபரப்பாக உள்ளதால் குப் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த எபிஸோட் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner