விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது சமையல் கலையுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் அட்டகாசம் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இவ்வாறு 2 சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாவது சீசன் துவங்கியுள்ள விஜய் டிவி தரமான கோமாளிகளையும் குக்குகளையும் தரை இறக்கி உள்ளது.
இதில் இந்த வாரத்தில் குக் வித் கோமாலி சீசன்3 நிகழ்ச்சியில் நான்காவது எலிமினேஷன் ஆக சந்தோஷ் அல்லது ரோஷினி இருவருள் யார் என்பதை அறிந்து கொள்ளும் தருணம் வந்தது. அப்போது சந்தோஷ், ஒருவேளை ரோஷினி எலிமினேட் ஆனால் என்னால் தாங்க முடியாது என கண் கலங்கினார்.
ஏனென்றால் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து ரோஷினி மற்றும் சந்தோஷ் இருவருக்கும் இடையே உள்ள அழகான நட்பு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சந்தோஷ் மட்டுமல்லாமல் கோமாளி பரத், மணிமேகலை அவர்களுடன் நடுவர்களான வெங்கடேஷ் பட் உள்ளிட்டோரும் கண்கலங்கினார்.
ஒரு கட்டத்தில் வெங்கடேசன் பட் இனிப்பை எடுத்துக்கொண்டு வந்து சந்தோஷ் வாயில் ஊட்டிவிட்டு அவர் இந்த வாரத்தில் காப்பாற்றப்பட்ட நபர் என்றும் ரோஷினி எலிமினேட்டாக போகிறார் என தெரிவித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
அதன்பிறகு தாமு இந்த வாரம் நோ எலிமினேஷன் என சொன்னதும் அனைவரது மனமும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கட்டிப்பிடித்து கொண்டனர். இவ்வாறு ஏப்ரல் ஃபுல் ஆக்கிய நடுவர்களை ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.
அத்துடன் பாரதிகண்ணம்மா ரோஷினிகாக பயில்வான் சந்தோஷ் உடன் அரங்கத்தில் இருந்த அனைவரும் கண் கலங்கியது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.