CWC 5 ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா.? மீண்டும் வேலையை காட்டிய விஜய் டிவி

CWC 5 : இன்று ஹாட் டாபிக்காக பேசப்பட்டு கொண்டிருக்கும் செய்தி பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையிலான பிரச்சினை தான். பிரியங்காவால் தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்பதாலும், சுயமரியாதை வேண்டும் என்பதற்காக குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக வீடியோ பதிவிட்டு இருந்தார் மணிமேகலை.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. மீடியா மிஷன் மற்றும் விஜய் டிவி ஆகியவற்றுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெங்கடேஷ் பட் மற்றும் மீடியா மிஷன் டீம் சன் டிவிக்கு சென்று விட்டது.

ஆனாலும் செஃப் தாமு நடுவராக இருந்து குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவருடன் இணைந்து மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பயணித்து வருகிறார். இந்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் இந்நிகழ்ச்சியில் மூன்று ஃபைனலிஸ்டை நடுவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 5 பைனலிஸ்ட்

அந்த வகையில் முதலாவதாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான சுஜிதா தேர்வாகி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா ஃபைனலிஸ்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவதாக யூடியூபர் இர்பான் தேர்வாகி இருக்கிறார்.

மேலும் இவர்களுடன் போட்டியிட்ட அக்ஷய் கமல் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார். இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியவர்கள் அடுத்த வாரம் வையல் கார்டு ரவுண்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்களை நடுவர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.

ஆகையால் ஐந்து போட்டியாளர்களை வைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நடக்க உள்ளது. மேலும் இந்த பைனலிஸ்ட்டை பார்த்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் விஜய் டிவி தன்னுடைய தொலைக்காட்சியில் உள்ளவர்களுக்கு சிபாரிசு செய்கிறது என்றால் இதிலுமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை

- Advertisement -spot_img

Trending News