ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

புகழை அழவிட்டு டிஆர்பி எகுற விட்ட விஜய் டிவி.. என்ன காரணம் தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சி மூலம் பலரும் சினிமாவில் கால் பதித்து வெற்றி அடைந்துள்ளனர். அப்படி சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.

சினிமாவைப் பொருத்தவரை பலரும் எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என கோடம்பாக்கம் முழுவதும் சுற்றித் திரிவார்கள். ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்து வெற்றி பெறுவார்கள்.

அப்படி வாய்ப்புகளை தேடி விஜய் டிவி மூலம் பிரபலம் அடைந்தவர் புகழ். இவருக்கு மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் முடி வெட்ட கூடாது என்பதால் அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை மறுத்தார்.

pugazh-vijaytv
pugazh-vijaytv

அதனால் ரசிகர்கள் இவர் எப்போது சினிமா வருவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது சிம்புவுடன் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். விஜய்டிவி பொருத்தவரை ஒரு சில நிகழ்ச்சி நன்றாக இருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்கும் வகையில் தான் அமைந்திருக்கும்.

அப்படி விஜய் டிவியில் தற்போது ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி முரட்டு சிங்கிள். இதில் ஆணும் பெண்ணும் தங்களது காதலே வெளிப்படையாக அனைவரும் முன்னிலையில் வெளிப்படுத்தும் வகையில் செயல்படுவார்கள்.

இதனைப் பார்த்தால் ஒரு சில ரசிகர்கள் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா என கடுப்பில் இருப்பார்கள் ஆனால் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் புகழ் பேசிய வீடியோ தற்போது ரசிகர்களை பார்க்க வைத்துள்ளது.

என்னையெல்லாம் முன்னாடி மதிக்கவே மாட்டார்கள் இப்போது யார் பார்த்தாலும் என்ன புகழ் என்னை மறந்துட்டியா என்று கேட்கும் அளவிற்கு நான் வளர்ந்து விட்டேன் என கூறியுள்ளார். நான் வளர்ந்ததுக்கு அப்புறம் தான் உனக்கு என்னை தெரிந்தது என பதிலுக்கு புகழ் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

Trending News