விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் புகழ். ஆரம்பத்தில் காமெடி ஷோக்களில் நகைச்சுவை செய்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு சென்று சாதித்தவர்கள் நிறைய பேர் உண்டு. அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியால் அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பவர்தான் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை காட்டி மொத்த மக்களையும் கவர்ந்தார்.
இதனால் அவருக்கு பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அஜித்தின் வலிமை, விஜய்யின் தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான், அருண் விஜய்யின் AV33 உட்பட பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அவர்களின் இயக்கத்தில்,
விஜய் சேதுபதியின் ‘VJS 46’ என்ற படத்திலும் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராகவே படம் முழுவதும் காமெடியன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

மேலும் சமீபத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலும் யோகி பாபுவே காமெடியன் கதாபாத்திரத்தை ஆக்கிரமித்து வந்தன நிலையில், அவருடைய இடத்தை தற்போது குக் வித் கோமாளி புகழ், தட்டி தூக்க போவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.