Connect with us
Cinemapettai

Cinemapettai

சூர்யாவுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. வேற லெவலுக்கு போயிட்டாரு போல!

suriya-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுடன் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்.. வேற லெவலுக்கு போயிட்டாரு போல!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. கடந்த சில வருடங்களாக ஒரு பெரிய வெற்றி கொடுத்த தடுமாறி வந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அவருக்கு செம கம்பேக் படமாக அமைந்தது.

இருந்தாலும் தியேட்டரில் சூர்யாவின் வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். அந்த வகையில் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் போன்ற படங்கள் தியேட்டருக்காகவே உருவாகி வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் வருகின்ற தீபாவளிக்கு அமேசான் தளத்தில் நேரடியாக ஜெய்பீம் என்ற படம் வெளியாக உள்ளது. இப்படி தியேட்டர் மற்றும் ஓடிடி என இரண்டு பக்கங்களிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.

தற்சமயம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். பக்கா கமர்சியல் படமாக உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

டி இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளன. இந்நிலையில் சூரி பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அதிலிருந்துதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற புகழ் நடித்து வருவது தெரியவந்தது. தற்போது அந்த புகைப்படத்தை குக் வித் கோமாளி ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

cook-with-comali-fame-pugazh-in-suriya40

cook-with-comali-fame-pugazh-in-suriya40

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top