Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹீரோவாக குக் வித் கோமாளி புகழ்.. கலக்கலான டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விஜய் டிவியில் பணிபுரிந்து பிரபலமானவர்கள் என லிஸ்ட் போட்டால், அது பல பேஜுக்கு செல்லும். அந்த லிஸ்டில் லேட்டஸ்ட் புது வரவு தான் நம்ம புகழ். சின்னத்திரை டு வெள்ளித்திரை என்ட்ரியும் வெற்றிகரமாக கொடுத்துவிட்டார் மனிதர். வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்தும் கலக்கிவிட்டார் புகழ்.
கடலூரில் மிடில் க்ளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் புகழ். நண்பர்கள் தான் இவரின் பக்கபலம். கலக்கப்போவது யார் நிகழ்ச்சி ஆடிஷனுக்கு சென்றவர் , ஆனால் கிடைத்ததோ விஜய் டிவியில் வேலை. பின்னர் இவர் தீனாவுடன் இணைந்து “சிரிப்பு டா” வில் கலக்கினார். கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அதன் பப்லிசிட்டி தான் இவருக்கு கோமாளி வாய்ப்பை பெற்று தந்தது. அதன் பின் நடந்தது அனைத்துமே அனைவருக்கு தெரியும்.
புகழேந்தி என்ற விஜய் டிவி புகழ் இன்று ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இன்று ஊட்டியில் தொடங்கியுள்ளது. மாதவனின் என்னவளே, மம்மூட்டி நடிப்பில் வெளியான ஜூனியர் சீனியர் படத்தை இயக்கிய சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. நாயகியாக இந்த “மிஸ்டர் ஜூ கீப்பர்” படத்தில் நடிப்பது ஷெரின் காஞ்சவாலா.
ஜே 4 ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். போஸ்டரை பார்க்கும் பொழுதே படம் ஜூ பின்னாளில் உள்ளது என்பது புரிகிறது.

pugazh MR ZOO KEEPER
மிருகங்களும் பேசும் என்பது போன்று பாண்டஸி கலந்து இருக்குமா என்பதெல்லம் போக போக தான் தெரிய வரும். காத்திருப்போம் அடுத்த அப்டேட்டுக்காக.
