Connect with us
Cinemapettai

Cinemapettai

deepa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி தீபாவை உருவ கேலி செய்த விஜய் டிவி பிரபலங்கள்.. கடுப்பாகி வச்சு செய்யும் நெட்டிசன்கள்

விஜய் டிவியில் பங்குபெறும் பலரும் பின்னாளில் மிகப்பெரும் சினிமா பிரபலங்களாக உருவெடுத்து வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி பிரபலங்கள் பலரும் என்று சினிமா நடிகர்களையும் தாண்டி புகழ் பெற்று வருகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல பேர் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் எல்லாரிடமும் பிடித்த பெண்மணியாக மாறி விட்டார் நடிகை தீபா. இவர் கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவருடைய வெகுளித்தனமான பேச்சும் சிரிப்பும் ரசிகர்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தீபா எந்த யூடியூப் சேனலில் வந்தாலும் அந்த சேனல் வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை அசால்டாக தொட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். விஜய் டிவியின் காமெடி பிரபலங்கள் பலரும் மற்றவர்களின் உருவங்களை கேலி செய்து மட்டுமே காமெடி செய்து பார்க்கிறோம்.

தீபா பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டான தோற்றத்தில் இருப்பார். அதை வைத்து கலாய்க்கிறேன் என அவரை அநியாயத்திற்கு மனது நோகும்படி செய்து விட்டனர் விஜய் டிவி பிரபலங்கள். இதனால் மனம் நொந்து போன தீபா மேடையிலேயே கண் கலங்கினார்.

மேலும் பெண்கள் ஒரு குடும்பத்திற்கு வம்சத்தை உருவாக்கி கொடுப்பதாலேயே உடல் எடை கூடி விடுகின்றனர், நான் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு நான் தான் அழகி, என்னைத்தான் அம்மா என்று கட்டிப்பிடிப்பார்கள் என அனைவரையும் கண் கலங்க வைத்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தற்போது தீபாவுக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய் டிவியின் இந்த மாதிரி தரங்கெட்ட காமெடிகளை விமர்சனம் செய்யவும் அவர்கள் தவறவில்லை.

deepa-cook-with-comali-fame

deepa-cook-with-comali-fame

Continue Reading
To Top