Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தை புகழ்ந்து தள்ளிய சர்ச்சை நாயகி.. எல்லாம் இதுக்குத்தான்!
தல அஜித் சினிமாவில் நுழைந்து 28 வருடங்கள் ஆன நிலையில் அந்த கொண்டாட்டத்திற்காக தல ரசிகர்கள் ஒரு புதிய புகைப்படத்தை உருவாக்கி பிரபலங்களை வெளியிடச் சொன்னார்கள்.
அதில் தற்போது சர்ச்சை நாயகியாக வலம் வரும் வனிதா விஜயகுமாரும் ஒருவர். மூன்றாவது திருமணம் செய்து கொண்டு சமீப காலமாக சர்ச்சையை கிளப்பி வருபவர். நாளுக்கு நாள் இவர் வரம்பு மீறி பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.
இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் அனிதாவிடம் தல அஜித்தின் 28 வருட தமிழ் சினிமாவை கொண்டாடும் வகையில் புகைப்படத்தை வெளியிட கூறியுள்ளனர். அதற்கு தல அஜித்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இருவரும் ஒரே நேரத்தில்தான் சினிமாவுக்குள் நுழைந்ததாகவும் சினிமாவில் நல்லது கெட்டது இரண்டையும் நிறைய பார்த்தவர்கள் நாங்கள் தான் என்பதையும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவ்வளவு வெற்றிகளுக்கும் இவ்வளவு ரசிகர்களுக்கும் சொந்தக்காரராக இருப்பதற்கு தல அஜித் ஏற்றவர் தான் எனவும், எப்போதுமே சிம்பிளாக இருக்கும் ஒரு மனிதன் எனவும் பாரபட்சம் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

vanitha-ajith-cinemapettai
ஒரு பக்கம் வனிதா சம்பந்தப்பட்ட கருத்துக்களுக்கு நிறைய எதிர்மறையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வருவதால் தன்னைப் பற்றி பேச ஒரு நல்ல கூட்டம் வேண்டுமே என அஜித் ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறாரா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
