Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீங்க தகுதியற்ற நடிகை என கூறிய ரசிகர்.. நெத்தி பொட்டில் அடித்தாற்போல் பதிலளித்த டாப்ஸி!
நடிகை டாப்ஸி சமீபகாலமாக சோசியல் மீடியாவில் தைரியமாக பல கருத்துக்களை பதிவிட்டு காரசாரமான விவாதங்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தை குறித்தும், போதைப்பொருள் விவகாரத்தை குறித்தும், நல்ல கருத்துக்களை பதிவிட்டு பிரபலங்கள் பலருடன் விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த சூழலில் நடிகர் டாப்ஸியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் டாப்ஸியை ‘தகுதியற்ற நடிகை’ என்று விமர்சித்துள்ளார்.
எனவே இந்த கருத்துக்கு டாப்ஸி, ‘நான் எதை உயர்த்த வேண்டும். நான் உயர்த்த வேண்டிய ஒரே விஷயம் உங்கள் கண்ணுக்குத் தெரியாத தரத்தை மட்டும் தான்’ என்று அந்த ரசிகருக்கு நெத்தி பொட்டில் அடித்தாற்போல் பதிலளித்துள்ளார்.
இது மட்டுமல்ல பலமுறை தகாத மொழியில் பேசும் ரசிகர்களின் பதிவை கண்டும் காணாததுமாய் விட்டுவிடாமல் அவர்களுக்கு அந்த கணமே பதிலடி கொடுப்பது தான் டாப்சியின் ஸ்டைல் என்பது குறிப்பிடத்தக்கது.

taapsee-cinemapettai
எனவே டாப்சியின் இந்த துணிச்சலான பதிவிற்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
