பிக்பாஸில் கலந்து கொண்டு பெயரைக் கெடுத்துக் கொண்ட 6 பிரபலங்கள்.. வனிதாவை மிஞ்சிய மாடல் அழகி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆரம்பத்தில் பரிச்சயமில்லாத நபர்களும் பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார்கள். மேலும், அனிதா, லாஸ்லியா போன்ற செய்தி தொகுப்பாளரகளுக்கு சினிமா படங்களில் நடிக்க பிக்பாஸ் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது பெயரை கெடுத்துக் கொண்டவர்களும் உள்ளனர்.

சினேகன் : கவிஞர் சினேகன் தன்னுடைய பல பாடல்களினால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக சினேகன் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். ஆனால் இவருக்குள்ள நல்ல பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கெடுத்துக் கொண்டார். சினேகன் பெண்களை தவறாக பார்ப்பது போன்ற எண்ணம் இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு வரத் தொடங்கியது.

கஞ்சா கருப்பு : தன்னுடைய யதார்த்தமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் கஞ்சா கருப்பு. இவர் பிதாமகன், தாமிரபரணி, பருத்திவீரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். ஆனால் 14 நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பரணியை தவறாக நடத்தியது தான்.

வனிதா : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ஃபேமஸான நடிகை யார் என்றால் அது வனிதா விஜயகுமார் தான். ஆரம்பத்தில் பெரிய அறிமுகம் இல்லாமல் இருந்த இவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பிக்பாஸில் சண்டை என்றாலே அது வனிதாவால் தான் என்றும் கூறும் அளவிற்கு சர்ச்சைக்கும் வனிதாவுக்கும் அவ்வளவு ஒரு ஒற்றுமை.

தாடி பாலாஜி : தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகராக இருந்த தாடி பாலாஜி, தன் மனைவியுடன் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாகவே பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்த சண்டையை சமரசம் ஆகலாம் அல்லது பெரிதுபடுத்தலாம் என்ற எண்ணத்தில் விஜய்டிவி இருந்துள்ளது. ஆனால் இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டனர்.

சேரன் : தமிழ் சினிமாவில் இயக்குனர், மற்றும் நடிகர் என பலராலும் அறியப்படுபவர் சேரன். பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். சேரன், லாஸ்லியா இருவரும் அப்பா, மகள் போல பழகி வந்தனர். இந்நிலையில் கவின், லாஸ்லியா இருவரும் காதலிப்பதாக தெரிந்த நிலையில் சேரன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மாடல் அழகி மீராமிதுன் சேரன் தன்னை தவறாக பார்ப்பதாக அவருக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தார்.

மீரா மிதுன் : மாடலிங் துறையில் மூலம் சினிமாவிற்கு நுழைந்தவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக பார்க்கப்பட்டார். இவர் சேரன் தன்னை தவறாக பார்ப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது வரை மீரா மிதுனின் வாழ்க்கை சர்ச்சையாக தான் உள்ளது.

Next Story

- Advertisement -