பாலிவுட்டில் படமா எடுக்குறீங்க.. தமிழ் இயக்குனர்களை பார்த்து கத்துகோங்க, பகீர் கிளப்பிய சர்ச்சை நடிகை

சமீபகாலமாக பாலிவுட்டில் டாப் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து படுமோசமான தோல்வியை அடைந்து வருகிறது. இதற்குக் காரணம் நிப்போட்டிசம் என்று ஒருபுறம் சொன்னாலும் இதில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று கூறப்பட்டது. ஆனால் தென்னிந்திய மொழி படங்கள் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதாவது கன்னட மொழியில் வெளியான கேஜிஎப் 2 படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் காந்தாரா படங்கள் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்த நடிகை.. குரூர தண்டனை கொடுத்து பழிவாங்கிய இயக்குனர்

அதிலும் காந்தாரா படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த சூழலில் பாலிவுட் படங்களின் தோல்வி அடைவதன் காரணத்தை சர்ச்சையின் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். அதாவது தென்னிந்திய படங்கள் மனிதர்களின் கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக எடுக்கப்படுகிறது.

அதாவது பொன்னியின் செல்வன் படம் சோழர்களின் கதைகளத்தை கொண்டது. அதேபோல் காந்தாரா படம் பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இவ்வாறு ரசிகர்களின் ரசனைக்கேற்ப தமிழ் இயக்குனர்கள் படத்தை எடுத்து வெற்றி பெறுகிறார்கள்.

Also Read : சமந்தா விவாகரத்துக்கு காரணமே அந்த நடிகர்தான்.. வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சிய கங்கனா

ஆனால் பாலிவுட்டில் மொத்தமாக கலாச்சாரத்தை விட்டு விலகி மேற்கிந்திய திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். இது போன்ற படங்கள் ரசிகர்களை கவர தவறிவிடுகிறது. இதனால் தான் பாலிவுட்டில் தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்கள் தோல்வி பெற்று வருவதாக கங்கனா கூறியுள்ளார்.

மிகவும் துணிச்சலான நடிகையான கங்கனா ரனாவத் பல விஷயங்களை தைரியமாக வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார். தற்போது தென்னிந்திய இயக்குனர்களோடு ஒப்பிட்டு பாலிவுட் இயக்குனர்களுக்கு எதிராக பேசியது பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : வாயினால் அழிந்து நாசமான 5 நட்சத்திரங்கள்.. பாலிவுட் தான் முக்கியம் என எல்லாத்தையும் இழந்த அசின்