Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து ரீமேக்? சிக்கிய அட்லீ
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவியாளராக பணியாற்றி விட்டு ராஜா ராணி படம் மூலம் இயக்குனரானவர் அட்லி. டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த அந்த படம் வெளியானபோது, மணிரத்னம் இயக்கிய மெளனராகம் படத்தின் ரீமேக் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி படத்தை அவர் இயக்கியபோது, விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் ரீமேக் என்று செய்திகள் வெளியாகின. இப்படி எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதும் அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.
இந்தநிலையில், தற்போது மீண்டும் விஜய் நடிப்பில் அவரது 61வது படத்தை இயக்குகிறார் அட்லி. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சிங் கெட்டப்பில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் கதையை தெலுங்குப்பட இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்த படம் ரஜினி நடித்த அண்ணாமலை படத்தின் ரீமேக் போன்ற கதையில் உருவாகயிருப்பதாக செய்திகள் பரவியுள்ளன. ஆனால் அட்லி தரப்பு இதை மறுத்துள்ளது. அதனால் வழக்கம்போல் இதுவும் வதந்திதான் என்று தெரிகிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
