vivegam

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜித் குமார் நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் வந்திருக்கும் படம்தான் விவேகம், இப்படம் நெகடிவ் விமர்ச்சனங்களை தாண்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது,ajith vivegam

அஜித் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.விவேகம் படம் பல விமர்சனங்களை தாண்டி சக்கைப்போடு போட்டு ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது.

3 வாரங்கள் தாண்டியும் இன்னும் தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விவேகம் படம் இந்தியாவில் மட்டுமே ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதற்கு முன் வெளிவந்த தமிழ் படங்களில் எந்திரன், தெறி, கபாலி படங்களே இத்தகைய சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.