தருமபுரியை சேர்ந்த அரசு பள்ளி சிறுவன் (16 வயது) கடந்த ஞாயிறு புளு வேல் விளையாட்டின் பாதிப்பால் அவரது கை விரல்களை அறுத்துக் கொண்டுள்ளான். தன்னிடம் செல் போன் இல்லாததால் தன்னுடைய நண்பனின் செல்லில் இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சமீபத்தில் தன் அறையில் விரல்களை அறுத்துக்கொண்டுள்ளான்.

விளையாட்டின்படி இது49 வது ஸ்டேஜ் டாஸ்க்காம். விரல்களை அறுத்துக் கொண்ட சிறுவன் அதனை பெற்றோர்களிடமிருந்து மறைக்க கையில் துணியை சுற்றி கொண்டிருந்திருக்கிறான். இதனை கண்ட பெற்றோர்கள் அவனை உடனே மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

பின்பு நடைபெற்ற போலீஸ் விசாரணையில் அவன் சில நாட்களாய் மிகவும் கோவமாய் வீட்டிலும், பள்ளியிலும் நடந்து வந்தது தெரியவந்தது. அவனது பள்ளி நோட்டில் நீல திமிங்கலம் படம் வரையப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

கடைசி டாஸ்க்கான தற்கொலை செய்து கொள்ளவும் மூச்சை அடக்கி முயற்சி செய்திருக்கிறான் சிறுவன். விசாரணையில் இவனை தவிர இவனது நண்பர்கள் மூன்று பேர் இதனை விளையாடி வருவது தெரியவந்துள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அப்படி என்னதான் இருக்கு அந்த கேம்ல?