‘ஏ.ஆர்.ரஹ்மான்’ என்றால் இசையின் கடல் என்று சொல்லலாம் ஏன் என்றால் அவரின் இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை தற்பொழுது இது எனது இந்தியா இல்லை என்று கூறினார், மூத்த பத்திரிகையாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கடந்த செவ்வாய்க் கிழமை பெங்களுரில் இரவு தனது வீட்டின் முன் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதிகம் படித்தவை:  ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு புத்தகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கவுரி லங்கேஷ் படுகொலைக்கு ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும், அரசியல்வாதிகளும், திரையுலகினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்தப் படுகொலை சில அரசியல்வாதிகளுக்கு எதிராக அவர் செயல்பட்டதற்காக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராகத் தனது கண்டனத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது ‘ஒன் ஹார்ட்’ இசைப் படத்தின் விழாவின்போது தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டிய தெறி வீடியோ!

இதுபற்றித் ஏ.ஆர்.ரஹ்மான், ‘கவுரி லங்கேஷ் படுகொலை மிக மிகத் துன்பகரமான நிகழ்வு. இந்த விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது எனது இந்தியா இல்லை. முன்னேற்றமும், கருணையும் கொண்ட இந்தியாவைத் தான் நான் பார்க்க விரும்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.