Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜாவாக போறவங்க இவங்க தானாம்.. சீன் ஓவரா இருக்கே!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய விறுவிறுப்பை சற்றும் குறைக்காமல் மக்களின் எதிர்பார்ப்பை எகிற விடுகிறது.
அந்த வகையில் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து 45 மணி நேரம் இரவு, பகல், வெயில், குளிர் என எதையுமே பார்க்காமல் மூன்று பேர்கொண்ட ஐந்து குழுக்களாக பிரிந்து நேரத்தை சரியாக கணக்கிட வேண்டும் என்ற டாஸ்கை அனைவரும் சேர்ந்து நேற்று முடித்தனர்.
இந்நிலையில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற முதல் இரண்டு டீமில் உள்ளவர்களை அடுத்த வார கேப்டன்ஷிப் போட்டிக்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்தார் பிக்பாஸ்.
அதாவது பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க்கில் அர்ச்சனா, சோம் சேகர், சம்யுக்தா ஆகியோரின் டீம் மூன்று மணிநேரத்தை கிட்ட தட்ட 18 நிமிட வித்தியாசத்தில் கணித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஜித்தன் ரமேஷ், ஆஜித், ஷிவானி ஆகியோர் 56 நிமிடங்களில் மூன்று மணி நேரத்தை கணித்து இரண்டாவது இடத்தையும், கேபி, ரியோ, ஆரி ஆகியோர் கொண்ட டீம் ஒருமணிநேரம் ஒரு நிமிட வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றதால் அர்ச்சனா டீமை சேர்ந்த மூவரையும், ஒவ்வொரு சுற்றிலும் மூன்று மணிநேரத்தை மிகக்குறைந்த வித்தியாசத்தில் கணித்ததால் ஆரி டீமையும் கேப்டன் டாஸ்க்கிற்கு தேர்வு செய்துள்ளார் பிக்பாஸ்.
இதனால் தேர்வான ஆரி டீமும், அர்ச்சனா டீமும் படு குஷியாக இருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் பலர், ‘செலக்ட் ஆனதுக்கே ஓவரா ஆட்டம் போடுறீங்க.. அப்ப ஜெயிச்சா?’ என்று தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
