Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸிடம் பிச்சை கேட்ட போட்டியாளர்கள்.. பாவம் துணி சோப்ல தான் மூஞ்சிய கழுவுராங்களாம்!
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த வார லக்ஸரி பட்ஜெட்டிற்காக, பிக் பாஸ் வீட்டில் ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
ஆனால் இதில் பாலாஜி செம்மையாக சொதப்பியதால், பிக்பாஸ் கடுப்பாகி ஜீரோ பாயிண்டுகளை கொடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் ஷாக் ஆக்கினார்.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் ஹவுஸ்மெட்டுகள் அவதிப்படுகிறார்கள்.
இந்த நிலையில் அர்ச்சனாவும் அறந்தாங்கி நிஷாவும் பிக்பாஸிடம் அத்தியாவசிய பொருட்களுக்காக பிச்சை கேட்டது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் நிஷா, ‘கறிய கண்ணுல காமிச்ச ரெண்டு வாரம் ஆச்சு. சிக்கனையும் காட்ட மாட்ராங்க’ என்று கதறுகிறார்.
மேலும், ‘ஃபேஸ் வாஷ் இல்லாம நான் துணி சோப்பு போட்டு தான் மூஞ்சி கூடக் கழுவுறேன்’ என்று பிக்பாஸிடம் முறையிடுகிறார் நிஷா.
இதற்கு அர்ச்சனா, ‘இந்த வாரம் சண்டே வாச்சும் கறிய கண்ணுல காட்டுங்க’ என்று பிக்பாஸிடம் வேண்டுகோள் வைக்கிறார்.
இவ்வாறு நிஷா பிக்பாஸிடம் பிச்சை எடுக்கும் போது கூட அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பது பிக் பாஸ் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்துள்ளது.
