வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆக போகும் R போட்டியாளர்.. இது என்ன புது புரளி, ட்ரெண்டிங்காகும் வெற்றியின் ரகசியம்

Bigg Boss Tamil 8 Title Winner: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி இருக்கிறது. ஆனாலும் மற்ற சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் டல் அடிக்கிறது. இதற்கு காரணம் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒருவிதமாக இருந்தாலும், இதனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியின் எகத்தாளமான பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்து வருகிறது.

அதனால் தான் போட்டியாளர்களை விறுவிறுப்பாக கொண்டு போவதற்கு பிக் பாஸ் பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறது. இருந்தாலும் அதில் பெருசாக சொல்லும் படி எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் அதிரடியாக வைல்ட் கார்டு மூலம் ஐந்து போட்டியாளர்கள் இன்று உள்ளே போகப் போகிறார்கள். இவர்கள் போன பிறகு ஆட்டம் வேறு மாதிரியான விறுவிறுப்பை ஏற்படுத்தப் போகிறது.

அந்த வகையில் இப்பொழுது வரை ஆண் போட்டியாளர்களில் முத்துக்குமரன் தான் ரொம்ப ஸ்ட்ராங்காக விளையாடி வருகிறார். விளையாட்டு யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் கொஞ்சம் பெயரும் எடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் தான் பிக் பாஸ் இன் டைட்டில் வின்னர் ஆகவும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சில விமர்சனங்கள் போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் இதெல்லாம் சுக்கு நூறாக உடைப்பதற்கு வைல்ட் கார்டு மூலம் போகும் போட்டியாளர் ஒருவர் மக்களின் பேவரிட் ஆக பிரபலமாக போகிறார். அவர் வேறு யாரும் இல்லை சீரியல் ஆக்டர் ராயன். அந்த வகையில் இவர் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகவும் வெற்றி பெறப் போகிறார் என்று இப்பொழுதே சோசியல் மீடியாவில் வர ஆரம்பித்து விட்டது.

அதற்கு காரணம் என்னவென்றால் இதுவரை நடந்த சீசன்களில் ARM வரிசைப்படி தான் வெற்றி பெற்று வருகிறார்கள். அதாவது முதல் சீசனில் ஆரவ்(A), இரண்டாவது சீசனில் ரித்விகா(R), மூன்றாவது சீசனில் முகேன்(M). இதே மாதிரி நான்காவது சீசனில் ஆரி(A), ஐந்தாவது சீசனில் ராஜு(R), ஆறாவது சீசனில் முகமது அசிம்(M), ஏழாவது சீசனில் அர்ச்சனா (A), தற்போது நடக்கிற எட்டாவது சீசனில் ராயன்(R) தான் வெற்றி பெறுவார் என்று ஒரு புரளி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

இதுதான் பிக் பாஸ் இன் வெற்றியின் ரகசியம் என்றும் கூறப்படுகிறது. அப்படி என்றால் R- ரஞ்சித் ஏன் இருக்கக்கூடாது என்றும் மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். எது எப்படியோ இந்த சீசனில் R எழுத்து போட்டியாளர் தான் வெற்றி பெறுவார் என்று உறுதியாக தெரிகிறது.

- Advertisement -

Trending News