சந்தானத்துக்கு போட்டியா பேயோடு மல்லுக்கட்டும் சதீஷ்.. கான்ஜுரிங் கண்ணப்பன் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Conjuring Kannappan Twitter Review: காமெடியில் இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த சந்தானம் ஹாரர் நகைச்சுவை படங்களில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவருக்கு போட்டியாக இப்போது சதீஷ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் இன்று வெளியாகி இருக்கிறது.

conjuring-kannappan
conjuring-kannappan

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் இப்போது தங்கள் விமர்சனத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

Also read: யோகிபாபு, சந்தானம் லிஸ்டில் சேர்ந்த சதீஷ்.. யுவன் கூட்டணியில் வேற லெவல் சம்பவம்

அதில் ஒரு சிலர் படம் நன்றாக இருப்பதாகவும் சிலர் சுமார் ரகம் என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும் வழக்கமான பேய் படங்களை போல் பழிவாங்கும் கதையாக இல்லாமல் இருப்பது ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

conuring kannappan
conuring kannappan

அதிலும் இடைவேளை காட்சியில் பயன்படுத்தியிருக்கும் புது கான்செப்ட் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் விறுவிறுப்பை கூட்டிய படம் இடையில் தடுமாறி இருக்கிறது. சில தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருந்தால் பிளாஷ்பேக் காட்சிகளுக்கு பிறகு படம் நன்றாக இருந்திருக்கும் எனவும் ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

conjurin-kannappan-review
conjurin-kannappan-review

Also read: முட்டி மோதியும் பிரயோஜனம் இல்ல.. பழைய ரூட்டுக்கு திரும்ப கதையை உருட்டும் சந்தானம்

ஆனாலும் காமெடி கொஞ்சம் படத்தை காப்பாற்றி உள்ளது. ஆக மொத்தத்தில் கான்ஜுரிங் கண்ணப்பன் சுமார் ரகம் என ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தற்போது புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் ரசிகர்கள் இதற்கான ஆதரவை கொடுப்பார்களா என்பது அடுத்தடுத்த நாட்களின் வசூலை பொறுத்து தெரிந்து விடும்.

review-conjuring kannappan
review-conjuring kannappan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்