Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆசிரியர் பகவானுக்கு நட்சத்திரங்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள்

பணியிட மாற்றம் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பகவானை மாணவர்கள் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என அழுத தகவல் வைரலான நிலையில், கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அவரை தொடர்ச்சியாக வாழ்த்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் பகவான். இவரின் கடின முயற்சியால் ஆங்கில பாடத்தில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நேரத்தில், பகவான் திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவரை விடாமல் கட்டி அணைத்தபடி கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். மாணவர்கள் – ஆசிரியர் இடையேயான இந்த பாசப்போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ஆசிரியர் பகவானை நெட்டிசன்கள் முதல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகர் விவேக் தனது சமீபத்திய ட்வீட்டில், ஒரு ஆசிரியரின் இடமாற்றம் ,மாணவர்களை கதறி அழச் செய்திருக்கிறது. அப்படி என்றால் அவரது பண்பை நினைத்துப் பாருங்கள். இவருக்கு சிறந்த ஆசிரியருக்கான ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என ஆசிரியர் பகவானை பாராட்டி இருக்கிறார்.

இந்த செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றிலும் வெளியானது. அதை தனது ட்விட்டரில் பதிவிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் `குரு சிஷ்யர்கள்’ என்ற தலைப்பில் பதிவேற்றி இருந்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும், `ஆசிரியருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையிலான பிணைப்பைப் பார்க்கும்போது, என் இதயத்தை உருக்குகிறது’ எனப் பதிவிட்டுள்ளார். இப்படி பல பிரபலங்கள் தொடர்ச்சியாக ஆசிரியர் பகவான் குறித்து நெகிழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top