Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக் பாஸ் வீட்டில் குழம்பி போயுள்ள போட்டியளர்கள்.. ஆண்டவர் கொடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களை வெற்றிகரமாக கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சீசன் கடந்த சீசன்களை காட்டிலும் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்த சீசன் அனுதினமும் புது திருப்பங்களைக் கொண்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு இருக்க நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல் கடந்த வாரம் நாமினேட் ஆகாதவர்களுக்கு டாஸ்க் ஒன்றைக் கொடுத்தார்.
அதாவது நாமினேஷன் லிஸ்டில் இல்லாத 11 பேரையும், இந்த வாரம் யார் வெளியே போகவேண்டும், யார் காப்பாற்ற படவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை லிவ்விங் ஏரியாவில் உள்ள போர்டில் குறிக்கச் சொன்னார் கமல்.
மேலும் இந்த டாஸ்க்கின் இறுதியில் பாலாஜி மற்றும் ஆஜித் ஆகியோர் வெளியே செல்ல வேண்டும் என்று மற்ற போட்டியாளர்கள் அதிக அளவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் வெளியில் மக்கள் வாக்குகளின்படி பாலாஜி எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுகிறார் என்று அறிவித்து நேற்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கமல்.
இவ்வாறிருக்க, இந்த டாஸ்கின் ஹைலைட் என்னவென்றால் வீட்டில் உள்ள பலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கு அதிகமாக ஆதரவு கொடுத்தது தான்.
இந்த எபிசோடை பார்த்த பலர், ‘எப்படித்தான் இப்படி டிசைன் டிசைனா யோசிக்கிறாங்களோ’ என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.

bigg-boss-4
