விராட் கோலி கும்ளே இடையே மோதல்

 

இந்நிலையில் கும்ப்ளேயின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில் அவரது பதவி காலத்தை நீடிக்க விரும்பவில்லை பிசிசிஐ. ஏனெனில் இவர் தன்னுடைய சம்பளத்தையும், அணியினருடைய சம்பளத்தையும் அதிகப்படுத்துமாறு கூறியிருந்தார். இதனால் பிசிசிஐ கும்ளே மீது அதிர்ப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தியா ஆஸ்திரேலியா தொடரின் போது கடைசி டெஸ்டில் கோலிக்கு காயம் ஏற்பட்டதால் கும்ளே குலதீப் யாதவை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்தார் கோலி. இதனால் கும்ளேகும் கோலிக்கும் வலுவான கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கும்ளேக்கு பதிலாக வேற ஒருவரை பயிற்சியாளராக தேர்வு செய்யலாம் என கோலி ஆசைப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் கோலி ரவி சாஸ்திரியையே பயிற்சியாளாராக நியமிக்கலாம் என விருப்பப்டுவதாக கூறப்படுகிறது.

நடப்பதை எல்லாம் பார்தால் சாம்பியன் ட்ராபி போட்டிக்கு பிறகு வேறு பயிற்சியாளர் நியமிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவே கூறப்படுகிறது.