fbpx
Connect with us

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் பார்ட் 2.. ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட ருசிகர தகவல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் பார்ட் 2.. ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட ருசிகர தகவல்!

ஆர் ஜே பாலாஜி மற்றும் என் ஜே சரவணன் ஆகியோரது இயக்கத்தில், நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் தான் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தில் ஊர்வசி, மௌலி, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பெரும் வெற்றியை பெற்றுத் தந்தனர்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய செய்தியை ஆர்ஜே பாலாஜி ஹாட்ஸ்டார் OTT  ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதாவது மதத்தை வைத்து போலி சாமியார்கள் செய்யும் காரியங்களை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையாக உருவானதுதான் இந்த மூக்குத்தி அம்மன் படம். ஆனால் இதில் கிறிஸ்துவ மதம் பற்றிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை இப்படத்திற்கு எதிராக உருவானது.

இவ்வாறிருக்க, ஹாட்ஸ்டார் OTT ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு  பாலாஜி பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘மூக்குத்தி அம்மன் 2 உருவாக வாய்ப்புள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாலாஜி, ‘சினிமா துறையில் முதல் பாகம் ஒழுங்காக ஓடவில்லை என்றால் கூட சிலர் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள். ஆனால் மூக்குத்தி அம்மன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே இரண்டாம் பாகம் கண்டிப்பாக எடுப்போம்’ என தெரிவித்திருக்கிறார்.

nayanthara-mookuthi-amman-cinemapettai

nayanthara-mookuthi-amman-cinemapettai

அதுமட்டுமில்லாமல் ஆர் ஜே பாலாஜி, ‘ஒருவேளை இரண்டாம் பாகம் உருவானால் முதல் பாகத்தில் மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்துவோம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, இந்த செய்தியை கேட்ட நயன் ரசிகர்கள் பலர், அவரை மீண்டும் அம்மன் வேடத்தில் காண ஆவலுடன் காத்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top