fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள் ? ஆச்சார்யா ஆவேசம்

sasikala

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள் ? ஆச்சார்யா ஆவேசம்

சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் சாதாரண கைதிகள் போல் நடத்தப்பட்டார். திங்கள் கிழமை டிடிவி தினகரன் ஜெயிலில் வந்து சசியை சந்தித்து மூன்று மணிநேரம் பேசினார். அதை தொடர்ந்து ஜெயிலரை சந்தித்து பேசினார். அப்போது சசிகலா வருமான வரி செலுத்தும் பட்டியலில் இருப்பதால் அவருக்கு சலுகை வழங்குமாறு கேட்டு கொண்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் நேற்று செவ்வாய் கிழமை முதல் சசி அடைக்கப்பட்டுள்ள அறையில், பேன், கட்டில், டி.வி., நாற்காலி, தினமும் இரண்டு செய்தி தாள் வழங்கப்படும் என சிறை துறை அறிவித்தது.

இது குறித்து சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு சார்பில் வாதாடிய வக்கீல் ஆச்சார்யா கூறுகையில், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இது போன்று சலுகைகள் வழங்குவது சட்டப்படி குற்றமாகும்.  தவறு செய்தவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்தினால் அதற்கு பெயர் தண்டனை கிடையாது.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா தமிழக சிறைக்கு மாற்றம் செய்ய முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா நினைத்தால் மாறிவிடமுடியாது. உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.

அப்படி அவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்தால் அதை எதிர்த்து அரசு சார்பில் ஆட்சேபனை தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படும், என்றார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top