இன்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்த தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். அப்படி நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறீர்களா? என்றாவது கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் உள்ள F மற்றும் J-யில் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று யோசித்திருக்கிறீர்களா?

கடந்த சில வருடங்களாக என்ன தான் பல்வேறு டிசைன்களில் கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டாலு, கீபோர்டில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் வந்ததில்லை. இப்போது ஏன் கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J-யில் மட்டும் ஏன் கோடு உள்ளது என்று பார்ப்போம்.

அதிகம் படித்தவை:  நடிகை சொன்ன ஒரு வார்த்தை! வீட்டில் குவிந்த ஆண்கள் பட்டாளம்…

15 வருடங்கள்

கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதியான கோடு கடந்த 15 வருடங்களாகத் தான் உள்ளது. இதற்கு முன்பு அப்படி ஒன்றும் இருத்ததில்லை.

காரணம்

கம்ப்யூட்டர் கீபோர்டின் F மற்றும் J-யில் உள்ள கோடு, ஒருவர் வேகமாக டைப் செய்வதற்காக அமைக்கப்பட்டது ஆகும்.

சரியான நிலை

இரண்டு கையிலும் உள்ள ஆள்காட்டி விரலை இந்த F மற்றும் J-யின் மீது வைத்து டைப் செய்வது தான் டைப்பிங் செய்வதன் சரியான நிலையாகும்.

பார்க்காமல் டைப்பிங்

சரியான நிலையில் வைத்து டைப் செய்தால், பார்க்காமல் டைப் செய்யலாம். சிலர் வேலை செய்யும் போது கம்ப்யூட்டர் கீபோர்டுகளைப் பார்க்காமலேயே வேலை செய்வர். இதனால் செய்யும் வேலையின் நேரம் மிச்சப்படுத்தப்படும்.

அதிகம் படித்தவை:  பூமராங் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அதர்வா முரளி ! போட்டோ ஆல்பம் உள்ளே !

2002 முதல்

2002 ஆம் ஆண்டு வரை கம்ப்யூட்டர் கீபோர்டில் உள்ள F மற்றும் J கீயின் மீது எந்த ஒரு கோடும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கீபோர்டு மாற்றம்

கம்ப்யூட்டர் கீபோர்டில் இம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ஜூன் ஈ.போட்டிச் (June E. Botich) என்பவராவார்.