கமல் ஹாஸன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக பலர் ட்வீட்டி வருகிறார்கள்.

தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் உலக நாயகன் கமல் ஹாஸன் பேசி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக பலரும் #TNstandswithkamal என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறார்கள்.

@UNKHOurPride வருமானவரியை கரெக்டா செலுத்தி நம்புற நேர்மைக்காக வாழ்ற நல்லமனிதன். பாருங்க #TNயே பின்னாடி நிக்குது #TNstandswithkamal

#TNstandswithkamal . நான் கமல் ஹாஸனை ஆதரிக்கிறேன். 7 கோடி தமிழர்களின் குரலாக உள்ளது அவர் குரல்.

#TNstandswithkamal பேச்சு சுதந்திரத்தை யாராலும் நசுக்க முடியாது. நான் கமல் ஹாஸன் பக்கம்.

இவர் தான் ஹாஸன் அடிகளார்

#TNstandswithkamal கமல் ஹாசன் மீது வழக்கு தொடுப்பது என்பது ஒட்டுமொத்த மக்களின் மீது தொடுப்பதாகும் மக்களின் மனசாட்சி அவர்

அரசியலுக்கு வருவேன், வந்துட்டே இருக்கேன்னு குழப்பாம.. சாதாரண மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் சமூக நண்பர் கமலுடன் என்றும்#TNStandsWithKamal

ஆமாம், கமல் ஒரு நடிகர். இந்நாட்டின் அனைத்து குடிமக்களை போன்று அவருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. உங்களின் பிரச்சனை என்ன?#TNstandswithkamal

#KamalHaasan ➡சட்டதிட்டம் நூறு நூறு இருந்த போதிலும் சிலர் இஷ்டம்போல ஊதி அத குறைச்சி வழங்குவார், ஏழைய கடுச்சி முழுங்குவார் #TNstandswithkamal