இன்று காலை முதல், சென்னை அடையாரில் சூர்யா இரண்டு வாலிபர்களை தாக்கிய பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஒரு பெண்ணிடம் இரு இளைஞர்கள் வம்பு செய்ததாகவும், அதை பார்த்த சூர்யா அடித்ததாகவும் கூறப்பட்டது.

அதிகம் படித்தவை:  விரைவில் தெறி வசூலை முறியடிக்கும் 24 ?

தாக்கப்பட்டதாக கூறப்பட்ட பிரவீண்குமார் சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில், பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது, அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்று புகார் தெரிவித்திருந்தார்,

அதிகம் படித்தவை:  பிரபல நாயகியை புகழ்ந்து தள்ளிய சூர்யா

இந்நிலையில் தற்போது அந்த இளைஞன் சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம். இதனால் இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது.