கடந்த 2 வருடமாக தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவரது படங்கள் திரைக்கு வந்து ஹிட்டானது. ஆனாலும் சிம்புவுடன் இணைந்து நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிரச்னை ஏற்பட்டது. நயன்தாரா கால்ஷீட் கொடுக்காததால் படத்தை முடிக்க தாமதமானதாக கூறியது பட குழு. கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டார்கள் என்று நயன்தாரா பதில் அளித்தார். அவர் நடிக்கவேண்டிய பாடல் காட்சிகளில் வேறு நடிகைகளை நடிக்கவைத்து படம் வெளியிடப்பட்டது. தற்போது நயன்தாரா மீது அதேபோல் மற்றொரு புகார் எழுந்துள்ளது.

அதிகம் படித்தவை:  நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.! வைரலாகும் புகைப்படம்

வெங்கடேஷுடன் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படம் ‘பாபு பங்காரம்’. சில ஷெட்யூல்களில் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்றார். ஆனாலும் படத்தை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது இயக்குனர் டீம். இன்னும் 10 நாட்கள் கால்ஷீட் தந்தால் படத்தை முடித்துவிடலாம். அதுபற்றி கண்டுகொள்ளாமலிருக்கிறார் நயன்தாரா. ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்வதென்றாலும் அதற்கு திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியவேண்டும். கால்ஷீட் தருவதில் நயன்தாரா தாமதம் செய்தால் பட ரிலீஸை, ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்கு தள்ள வேண்டி இருக்குமாம் என புலம்புகிறது பட தரப்பு