விஷால்-சிம்பு இடையே கடும் போட்டி

simbu-vishalநடிகர் சிம்பு மீண்டும் வாலு இயக்குனர் விஜய் சந்தருடன் ஒரு படத்தில் இணையபோவதாகவும் இது தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விஷால் வாயிலாக இப்படத்துக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அது என்னவென்றால், டெம்பர் படத்தை தமிழில் ரீமேக் செய்ய நடிகர் விஷால் ஏற்கனவே திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவர் அந்த படத்தை தொடங்கவில்லை. தற்போது விஷால் விரும்பிய படத்தில் நடிக்க சிம்பு தயக்கம் காட்டுகிறாராம்.

இது ஒருபக்கம் இருக்க, சிம்பு – விஜய் சந்தர் இணையும் படத்துக்கான பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றுள்ளது. இது டெம்பர் படத்தின் ரீமேக்கா அல்லது வேறொரு புதிய படமா என்பது குறித்த தகவலை படக்குழுவினர் விரைவில் தெரிவிக்கவுள்ளனர்.

Comments

comments

More Cinema News: