Tamil Cinema News | சினிமா செய்திகள்
சேட்டை செய்யும் நடிகர்கள்.. கோட்டை விடும் ரசிகர்கள்
தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே நடிகர்களுக்குள் ஒரு போட்டியை ஏற்படுத்தி அதனையே விளம்பரமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது பெரிய கும்பல். இவை தற்போது ஆரம்பித்தது அல்ல. தியாகராஜ பாகவதர் சின்னப்பா, எம் ஜி ஆர் சிவாஜி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, அஜித் விஜய், தனுஷ் சிம்பு, தற்போது சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி.
இப்படி இரண்டு இரண்டு குழுக்களாக பிரித்து அவர்கள் படங்கள் வெளிவரும் நேரத்தில் இரண்டு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் இதுதான் வருமானம். உன்னை விட நான் பெரியவன் என்னை விட நீ பெரியவன் என்ற போட்டியை உருவாக்கி அவர்களுக்குள் கூட்டத்தை அதிகப்படுத்தி அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமே இந்த படங்களின் வசூல்.
கண்டிப்பாக இதற்கெல்லாம் இரண்டு நடிகர்களும் பெரிய அளவில் குரல் கொடுப்பதில்லை ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு மட்டும் சற்று பதில் சொல்வார்கள் இதெல்லாம் வேண்டாம் என்று. ஏனென்றால் இந்த ரசிகர்கள் கொடுக்கும் பணத்தில் தான் அவர்களுக்கு சம்பளமே.
ரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள், இயக்கங்கள் தற்பொழுது கட்சிகள் வரை நம்ம நடிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? அதற்கு நடிகர்களும் தவறு என சொல்ல வேண்டாமா?
இதில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால் தற்பொழுது அந்த நடிகர்களே கூறினாலும் ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. இந்த தீவிர ரசிகர்களை ஆரம்பத்திலிருந்தே அப்படி மாற்றி விட்டார்கள்.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் இந்த போட்டியை தொடக்கத்திலேயே ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் 90 சதவீத ரசிகர்கள் பால் அபிஷேகம் முதல் நல்ல விஷயங்களை செய்வது என அவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்கள் மற்றும் காலேஜ் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்கள் வரை தான்.
கல்லூரியில் இரண்டாவது வருடம் படிக்கும் மாணவர்கள் அவர்கள் வைத்திருக்கும் அரியர் பேப்பரை கிளியர் பண்ணவே பயம் வந்துவிடும். அப்புறம் இறுதியாண்டு படிக்கும்போது மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய யோசனை வந்துவிடும். அதனால் அவர்கள் இதையெல்லாம் கண்டுக்காமல் விட்டு விடுவார்கள்.
ஆனால் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படித்தால் மட்டும் போதும் அதுவே அவருடைய முதல் வேலை, மற்ற நேரங்களில் சினிமா தான் அவர்களுடைய பொழுதுபோக்கு. இனிமேலும் இரண்டு நடிகர்களை பிரித்து போட்டி போட வைப்பது நிறுத்தப்பட வேண்டும்.
புதுமுக நடிகர்கள் நிறைய பேர் வரவேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். ஒருவருக்கு 10 கோடி சம்பளமாக கொடுப்பதற்கு குறைந்தது 20 நடிகர்களை நடிக்க வைத்து விடலாம்.
பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலசந்தர் இவர்கள் எல்லாம் படத்தை நம்பி எடுத்தார்கள் வெற்றி பெற்றார்கள். தற்பொழுது உள்ள இயக்குனர்கள் ஹீரோக்களை நம்பி படம் எடுக்கிறார்கள். முன்பெல்லாம் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக ஓடும் படம், நல்லா இல்லை என்றால் ரஜினி படமாக இருந்தாலுமே தோல்விதான்.
ஆனால் தற்பொழுது மொக்கை படத்தையும் விளம்பரம் பண்ணி காசு பார்த்து விடுகின்றனர் தயாரிப்பாளர், நடிகர்கள், இயக்குனர்கள். படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்று அடித்து விடுகிறார்கள்.
