Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

களைகட்டிய ஆர்யா வீடு… கல்யாணத்திற்காக குவிந்த எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள்

ஆர்யாவின் வீட்டு கல்யாணத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், கல்யாண மாப்பிள்ளை ஆர்யா இல்லை அவர் தம்பி சத்யா.

தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களால் புது புது ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறது. அந்த பட்டியலில் ஒன்று தான் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. மோஸ்ட் வாண்டட் பேச்சிலர் ஆர்யாவிற்காக மணப்பெண்கள் தேடப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியில் 15 இளம் பெண்கள் கலந்து கொண்டனர். பல கட்ட தேர்வுக்கு பிறகு கடைசியில் ஒரு பெண்ணை ஆர்யா தேர்வு செய்து மணமுடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்தியில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் எந்த பிரபலமும் திருமணம் செய்யவில்லை. தமிழ் ரசிகர்கள் கலாய்ப்பார்களே கண்டிப்பாக ஆர்யா திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கெல்லாம் ஆப்பாக? ஆர்யா கடைசி நேரத்தில் யாரையும் திருமணம் செய்யமாட்டேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், ஆர்யாவிற்கு முன்னர் அவரது தம்பி சத்யா திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாவனா என்ற பெண்ணை, இரு வீட்டாரின் சம்மதத்துடன் சத்யா மணந்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் சிம்பு, ஜெயம் ரவி, சூரி, ஹரீஷ் கல்யாண், வைபவ், ஷாம் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அத்திருமணத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஆர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்யாவின் தம்பி சத்யா புத்தகம், அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சத்யா தனது அண்ணன் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சந்தனத் தேவன் படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top