Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
மனைவியுடன் சேர்ந்து ஓசியில் மங்களம் பாடும் பிரபல இயக்குனர்.. கடுப்பாகி எச்சரித்த தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் தற்போதைய கமர்சியல் இயக்குனர் என்றால் அது அந்த மூன்றெழுத்து இயக்குனர் தான். பெரிய நடிகரை வைத்து தொடர்ச்சியாக பல படங்களை வெற்றிப் படங்களாக கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார்.
ஆனாலும் இவரின் மீது தேவையில்லாத செலவுகள் செய்பவர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. இயக்குனர் தன்னுடைய மனைவியை சொந்தக் காசில் வெளிநாடு கூட்டிக் கொண்டு சென்றால் அது அவருக்கு பெருமை. ஆனால் தயாரிப்பாளர் காசில் ஓசியில் கூட்டிச் சென்று வேலை செய்யாமல் ஊர் சுற்றினால் கடுப்பாக தானே செய்வார்கள்.
இந்நிலையில் இயக்குனர் பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாக சமீபத்திய செய்திகள் வெளிவந்தன. கிட்டத்தட்ட படத்தின் கதையை உறுதிசெய்து படத்திற்கு இன்சூரன்ஸ் கேட்டு பிரபல நிறுவனத்திடம் படக்குழு அணுகியுள்ளனர்.
படத்தின் இயக்குனர் யார் என்ன கேட்டதுமே அதிர்ச்சி அடைந்த அந்த இன்சூரன்ஸ் கம்பெனி, இந்த இயக்குனர் தேவையில்லாத செலவுகளை தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு தொடர்ந்து வைத்து வருகிறார் என அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது எனவும் படத்துக்கான இன்ஷூரன்ஸ் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனராம்.
உடனே படக்குழு இயக்குனரிடம் மனைவியை கூட்டிக்கொண்டு படப்பிடிப்பிற்கு வந்தால் படத்தின் ஒப்பந்தத்தைக் கேன்சல் செய்துகொள்ளலாம் என எச்சரித்துள்ளார்களாம். ஆக தென்னிந்திய முதல் வட இந்தியா வரை தன்னுடைய பெயரை எக்கச்சக்கமாக டேமேஜ் செய்து வைத்துள்ளார் அந்த மூன்றெழுத்து இயக்குனர்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறீர்கள், அப்புறம் ஏன் ஓசியில் மனைவியை கூட்டிக் கொண்டு ஊர் சுற்றுகிறீர்கள் என கடுப்பாகி விட்டார்களாம் கோலிவுட் வாசிகள்.
