தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சமீப காலமாக மிகவும் அபாயகரமான கட்டத்தை எட்டி வருகின்றது. இதில் உச்சக்கட்டமாக சமீபத்தில் விஜய் டிவியில் நீயா நானாவில் பேய் பற்றி பேசினார்கள்.

இதில் ஒரு பெண் முடிந்தால் என் மீது பேய் பிடிக்க வை என்று கூறி தனி அறைக்கு சென்றனர், கடைசி வரை பேய் வரவே இல்லை.என்ன தான் விழிப்புணர்வு என்றாலும், TRPக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா என கோபமாக மக்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

அனைத்தையும் தாண்டி, “பாயாசம் எங்க டா?” என்பது போல் “பேய் எங்க டா?” என பலரையும் கேட்க வைத்து நெட்டிசன்களுக்கு மீம்ஸ் வேட்டையாக அமைந்தது.