Connect with us

Sports | விளையாட்டு

விஜய் ஷங்கரை பாராட்டி தள்ளும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்.. உலகக்கோப்பையில் நம்பர் நான்கில் ஆட ஏற்றவரா?

இன்றைய போட்டியில் பேட்டிங்கில் அதிரடியாக ஆடிய விஜய் ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்.

விஜய் ஷங்கர் VIJAY SHANKAR

மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். இந்திய ஏ அணி, ஐபில் மற்றும் ரஞ்சி போட்டிகளில் நன்றாக விளையாடியதன் காரணமாகவே இவரை டெஸ்ட் அணியில் சேர்த்தனர். எனினும் இவரது அறிமுகம் நடந்தது என்னவோ ஸ்ரீ லங்காவில் நடந்த டி 20 போட்டியான நிதாஸ் கோப்பையில் தான். பின்னர் ஒரு நாள் போட்டிகளிலும் சேர்க்கப்பட்டார். ஹர்டிக் பாண்டியாவின் காயம் இவருக்கு வரமாக அமைந்தது. நியூஸிலாந்துடனான போட்டிகள் மற்றும் தற்பொழுது நடக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றைய நாக்பூர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட் இழந்து தடுமாறிய சமயத்தில் அதிரடியாக கேப்டன் கோலியுடன் இணைந்து ஆடினார். 41 பந்தில் 44 ரன்கள் ( ஐந்து தரும் ஒரு 6 அடக்கம்) எடுத்தார். துரதிர்ஷ்ட விதமாக ரன் அவுட் ஆனார்.

இந்நிலையில் ட்விட்டரில் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். ஹர்டிக் பௌலிங் ஆல் ரௌண்டார் என்றால் விஜய் பேட்டிங் ஆல் ரௌண்டார் என பெயர் எடுத்து வருகிறார். வாழ்த்துக்கள் விஜய் ஷங்கர் ப்ரோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top