Tamil Cinema News | சினிமா செய்திகள்
மைதானத்தினுல் கமெண்டரியா ? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் ! வெஸ்ட் இண்டீஸ் vs உலக லெவன் !
மேற்க்கிந்திய தீவுகளில் கடந்த செப்டம்பர் இர்மா மற்றும் மரியா சூறாவளி தாக்கியதில் பலத்த சேதத்தை சந்தித்தது. அந்நாட்டில் உள்ள அங்குலா மற்றும் டோம்னிக்கா மைதானங்களை சரி செய்வதற்காக, நிதி திரட்டும் வகையில் கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் vs உலக லெவன்
இங்கலாந்தில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் முதல் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி பேட்டிங் புரிந்தது. மேலும் 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் பொழுது தான் மேற்கூறிய வர்ணனையாளர் மைதானத்தின் உல் புகுந்து பேட்டி எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
நாசர் ஹுசைன்
ஆட்டம் லைவ் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர் நாசர் ஹுசைன் நடு மைதானத்தில் மைக்குடன் இருந்தார். பின்னர் முதல் ஸ்லிப்பில் நின்று கொண்டு வர்ணை செய்தார் நாசர் ஹுசைன்.
மேலும் மைக்குடன் வீரரிடம் சென்று கேள்வியும் கேட்டார்.
இந்த டி20 போட்டிக்கு சர்வதேச போட்டி அந்தஸ்தையும் வழங்கியுள்ளது ஐசிசி. இதுவே இப்பொழுது சர்ச்சைக்கு காரணமாகி விட்டது. கிளப் போட்டிகளில் கூட பௌண்டரிக்கு வெளியே தான் இருப்பார் நிகழ்ச்சி வழங்குபவர். மேலும் வீரருக்கு மைக் கொடுத்துவிட்டு, வெளியில் இருந்து தான் கேள்வி கேட்பது வழக்கமாக உள்ளது.
இப்படியெல்லாம் சர்வதேச அந்தஸ்து உள்ள போட்டிகளில் நடக்கலாமா என்று கிரிக்கெட் ரசிகர்கள், நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளன. அதுமட்டுமன்றி ஸ்கை கிரிக்கெட், வர்ணனையாளர் நாசர் ஹுசைன் மற்றும் ஐசிசி பலரின் கடுமையான சாடுதலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
