சென்னை: ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க மணிரத்னம் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியான படம் தளபதி. தளபதி தமிழகம் மற்றும் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது.

படத்தை பார்த்தவர்கள் இந்த கூட்டணி மீண்டும் சேராதா என்று எதிர்பார்த்தனர்.

26 ஆண்டுகள் கழித்து ரஜினி, மம்மூட்டி ஆகியோரை வைத்து மீண்டும் படம் எடுக்கும் வேலையில் இறங்கியுள்ளாராம் மணிரத்னம். அவர்கள் இருவரின் இமேஜுக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதி வருகிறாராம் மணிரத்னம்.

ரஜினி தற்போது ஷங்கரின் 2.0 பட வேலைகளை முடித்துவிட்டு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார்.

உடல்நலம் காரணமாக தற்போது எல்லாம் ரஜினி ஒரு நேரத்தில் ஒரு படத்தில் தான் நடித்து வருகிறார். ஒரு வேலை மணிரத்னத்திற்காக அந்த கொள்கையை தளர்ப்பாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

மம்மூட்டி, ரஜினியை வைத்து மணிரத்னம் இயக்க விரும்பும் படத்தை 2018ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளாராம். மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை எதிர்பார்த்த அளவுக்கு போகாத நிலையில் அவர் அடுத்த பட வேலைகளை துவங்கியுள்ளார்.

அதிகம் படித்தவை:  தோழர் ஆர்.ஜே.பாலாஜி செய்த உதவியால், மனம் நெகிழ்ந்த பிரபல இயக்குனர் !