Connect with us

Cinemapettai

2020 முழுவதும் தனுஷ் படங்கள்.. அடேங்கப்பா! இத்தனை படம் ரிலீஸ் பண்றீங்களா?

danush-new

Tamil Cinema News | சினிமா செய்திகள்

2020 முழுவதும் தனுஷ் படங்கள்.. அடேங்கப்பா! இத்தனை படம் ரிலீஸ் பண்றீங்களா?

கோலிவுட்டில் சிறந்த நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த வருடத்தில் அசுரன் என்ற மாபெரும் ஹிட் கொடுத்து அனைவரையும் மிரள வைத்தவர். வசூல் ரீதியாகவும் தற்போது 100 கோடி என்பதை தொட்டு விட்டார்.

இதனால் படத்துக்குப்படம் இவரது வியாபாரமும் எழுந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் தனுஷ் 2020இல் தொடர்ந்து ஐந்து படங்கள் நடித்து வெளியிடப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில் முதலாவது துரை செந்தில்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் பட்டாசு. இதனை தொடர்ந்து பரியேறும்பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கர்ணன் படம் வெளியாக இருக்கிறது.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சுருளி என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள கேங்ஸ்டர் திரைப்படம் அடுத்த வருடத்திலேயே வெளியாக உள்ளது. மேலும் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இயக்கி நடிக்க இருந்த திரைப்படத்தின் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படம் கைவிடப்பட்டது. அதை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கி மேற்கண்ட படப்பிடிப்பை முடித்து அடுத்த வருடமே வெளியிடும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றோர்தான் ஒரு வருடத்தில் 5, 6 படங்கள் ரிலீஸ் செய்வார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் அந்த அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்.

சூப்பர் சார்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top