பொய் பேசுவதையே கதையாக வைத்து ஹிட் கொடுத்த கமல்.. அதுவும் 5 படத்தில் மாஸ் பண்ணிருக்கார்

தமிழ்சினிமாவில் உலகநாயகனின் படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். ஆரம்பத்தில் கமலஹாசனின் படங்கள் எல்லாம் நகைச்சுவை கலந்து இருக்கும். அதில் பொய்யை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்ட 5 திரைப்படங்களைப் பார்க்கலாம்.

காதலா காதலா : சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியான திரைப்படம் காதலா காதலா. ராமலிங்கம், சுந்தரலிங்கம் கதாபாத்திரங்களில் கமல், பிரபுதேவா இருவரும் மாறி மாறி பொய் சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்த படம். ஒரு பொய், பல பொய்கள் உருவாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த படம் காதலா காதலா.

மைக்கேல் மதன காமராஜன் : சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல் நான்கு வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதன கோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு என்று நான்கு வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் கமலஹாசன். இப்படத்திற்கு வசனகர்த்தா கிரேஸி மோகன். படம் முழுக்க பொய்கள் நிறைந்திருந்தாலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் அமைந்த படம் மைக்கேல் மதன காமராஜன்.

பஞ்சதந்திரம் : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். ஐந்து நண்பர்கள் ஒன்றாக பெங்களூர் செல்லும்போது அங்கு மேகியின் இறந்து கிடைக்கிறார். அந்தப்பழி இவர்கள் மேல் விழிக்கிறது. அதிலிருந்து மீள்வதற்கு என்னென்ன பொய்கள் சொல்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கிறது.

அவ்வை சண்முகி : கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், நாகேஷ், ஜெமினி கணேஷ், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் மகளைப் பார்ப்பதற்காக கமல்ஹாசன் வேலைக்காரப் பெண்ணாக பெண் வேடமிட்டு பண்ணு லூட்டிகள் திரையரங்கையே சிரிப்பலைகள் அதிர வைத்தது.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் : தமிழ் சினிமாவிற்கு இப்படத்தின் மூலம் கட்டிப்பிடி வைத்தியத்தை அறிமுகம் செய்திருந்தார் கமலஹாசன். இப்படத்தில் டாக்டர் பட்டத்தை பெறுவதற்காக பிரகாஷ் ராஜிடம் பல பொய்கள் சொல்வார் கமலஹாசன். படம் முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்ட வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் வசூலில் வேட்டையாடியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்