சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் இவர் மிகவும் கடினப்பட்டு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தார் இதற்கு காரணம் இவரின் கடின உழைப்பே.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோரின் காமெடி வரிசையில் இடம் பெற்றிருந்தவர் காமெடி நடிகர் சந்தானம். காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் இப்போது காணாமலே போய்விட்டார்.

முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால், சந்தானத்தின் காமெடி இல்லாமல் இருக்காது. அஜித், விஜய், சூர்யா, உதயநிதி ஸ்டாலின், ஆர்யா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் வடிவேலுவைப் போன்று தானும் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்ற ஆசையில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் படத்தில் தனியாக ஹீரோ அவதாரம் எடுத்தார்.

ஆனால், இப்படம்  சுமாராக தான் ஓடியது . அதோடு தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மெடு பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

இப்படத்திற்கு முன்பாக, பவர்ஸ்டார், சந்தானம், சேது ஆகியோரின் கூட்டணியில் காமெடி படமான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்தது. ஆனால், இப்படமும் சுமாராகதான் ஓடியது .

தொடர்ந்து இனிமே இப்படித்தான் படமும், பேய் சீசனில் தில்லுக்கு துட்டு படத்திலும் நடித்திருந்தார். ஆனால், எந்த படமும் சந்தானத்துக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்த நிலையில், இவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் குறைந்தது. சந்தானம் இழந்த காமெடி வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சூரி தற்போது காமெடியில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், சந்தானத்தின் ஹீரோ பட்டியலில் ஆனந்த் பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள, சர்வர் சுந்தரம் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.santhanam as action hero

தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகயிருப்பதால் , இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.