காமெடி நடிகர்கள் நடித்த முதல் படம்.. அதுக்கப்புறம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைசிட்டாங்க

கதை, பாடல், சண்டை காட்சி இவை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நகைச்சுவையும் முக்கியம். நம் சோகத்தை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர்களில் நடித்த முதல் படம் என்ன என்று பார்க்கலாம்.

கவுண்டமணி: 1970 இல் வெளியான ‘ராமன் எத்தனை ராமனடி’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா ஆகியோர் நடித்திருந்தனர் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பி மாதவன். இப்படத்தில் கவுண்டமணி அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தலை சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து உள்ளார் கவுண்டமணி. அவருடைய நகைச்சுவை தலைமுறை கடந்தாலும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துக் கொண்டே இருக்கும்.

செந்தில்: 1979இல் வெளியான ‘ஒரு கோயில் இரு தீபங்கள்’ திரைப்படத்தில் செந்தில் நடித்திருந்தார்.எஸ் பி முத்துராமன் இப்படத்தை இயக்கியிருந்தார், படத்தின் தயாரிப்பாளர் உஷா.கவுண்டமணி இல்லாமல் தனியாக செந்தில் செய்யும் நகைச்சுவைகளும் ரசிக்கும்படியே இருக்கும். கவுண்டமணியிடம் அடிவாங்கியே பல படங்களில் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்து இருக்கிறார் செந்தில்.

வடிவேலு: ராஜ்கிரன், மீனா ஆகியோர் நடித்த 1991 இல் வெளியான கஸ்தூரிராஜா இயக்கத்தில் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் வடிவேலு அறிமுகமானார். கவுண்டமணி, செந்தில் போன்ற நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து சிறுசிறு வேடங்களில் நகைச்சுவை செய்து அசத்தி, தனியாக ஒரு காமெடி சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார் வடிவேலு. இவருடைய நாய் சேகர், வண்டுமுருகன், கைப்புள்ள, எட்டு ஏகாம்பரம் என்ற கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் என்றும் பதிந்திருக்கும்.

விவேக்: 1987ஆம் ஆண்டு வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் விவேக். சுகாசினி,எஸ்பி பாலசுப்ரமணியன் நடித்திருந்தனர். கவிதாலயாபுரோடக்சன் இப்படத்தை தயாரித்திருந்தது. தன்னுடைய நகைச்சுவையில் கிண்டலுடன் கருத்துக்களையும் சொல்வதில் வல்லவர் விவேக். இவர் நடித்த படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூடநம்பிக்கை போன்றவற்றைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். விவேக் சின்ன கலைவாணன் மற்றும் ஜனங்களின் கலைஞன் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.

vivekh
vivekh

சந்தானம்: சிலம்பரசன், ஜோதிகா ஆகியோர் இணைந்து நடித்திருந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சந்தானம். இப்படத்தின் இயக்குனர் சிலம்பரசன். சந்தானம், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று வித்யாசமான காமெடிகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சந்தானம் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்களும் ஒரு காலகட்டத்தில் காத்திருந்தார்கள். நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்