டிவியில் பணியாற்றி பின் ஹீரோவாக முன்னேறியவர் சிவகார்த்திகேயன். அவர் ஹீரோவாக நான் தான் காரணம் என ஒருவர் தெரிவித்துள்ளார். அது வேறு யாருமில்லை காமெடியன் சதீஷ் தான்.

நேற்று  நடந்த ரெமோ பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய சதீஷ், “சிவகார்த்திகேயன் ஹீரோ ஆவதற்கு நான் தான் முக்கிய காரணம். இருவரும் ஒன்றாக தான் குறும்படங்களில் நடிக்க தொடங்கினோம்.” “நான் ஒரு பெரிய காமெடியன் ஆக வேண்டும் என சிவகார்த்திகேயன் அடிக்கடி சொல்லிகொண்டிருப்பார்.

நான் தான் அவரை ‘நீ ஒரு ஹீரோ மெட்டீரியல்’ என சொல்லி சொல்லி அவரை ஹீரோ ஆக்கிவிட்டேன்.” “அவர் ஹீரோ ஆனதால் தான் அவர் நண்பன் நான் ஒரு காமெடியன் ஆக முடிந்தது” என கூறியுள்ளார்.