காமெடி நடிகர் சூரி இவர் தற்பொழுது பல படங்களில் நடித்துவருகிறார் இவறின் காமெடிகள் அனைத்தும் அனைவரும் ரசிக்கும் அளவிற்கு இருக்கும், புஷ்பா புருஷன் என்றால் போதும் உடனே அனைவருக்கும் முதலில் தோன்றுவது நம்ம சூரிதான்.

soori

சந்தீப் கிஷன், மெஹ்ரீன் பிரிஸாடா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’அதை தொடர்ந்து
தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் ஏஞ்சலினா என்ற படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் அதிகமாக புது முகங்களை அறிமுக படுத்துகிறார்.

soori

இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார் ,ஆறாம் திணை பிலிம்ஸ் ஸ்ரீ சாய் சிரஞ்சீவி பிலிம்ஸ் நிறுவனகள் சேர்ந்து படத்தை தயாரிகிறார்கள். சுசீதரன் படம் எப்பொழுதும் அனைவரின் எதிர்பார்ப்பை எகிரவைத்துவிடும் இந்த படத்திலும் அதேபோல் தான்.

அதிகம் படித்தவை:  'நான் கடவுள்' சமயத்தில் அஜீத்தை மிரட்டியவர் அன்புச்செழியன்- இயக்குனர் சுசீந்திரன்
suseenthiran

இந்த படத்தை பற்றி இயக்குனர் சுசீந்திரன் ட்விட்டரில் ஒரு பதிவை கொடுத்துள்ளார் அதில் பரோட்டா சூரியின் மகன் இந்த படத்தில் நடிப்பதாக தெரிகிறது.

soori son

அந்த டீவீட்டில் அவர் கூறியிருப்பதாவது…நேற்று படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் சூரியின் மகன் சர்வான் சூரியுடன் சேர்ந்து நடித்தான். குழந்தைகளை நடிக்கவைப்பது என்பது எப்போதும் எனக்கு சந்தோஷத்தை தரும். அதுவும் சூரியின் மகனை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  இதுவரை வெளிவராத காமெடி நடிகர் சூரியின் மகள்,மகன் புகைப்படம்.!
Actor Soor

இதில் ஓன்று என்னவென்றால் சூரியை வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகபடுத்தியதே சுசீந்திரன் தான் ,தற்பொழுது ஏஞ்சலினா படத்தின் மூலம் சூரியின் மகனை அறிமுகபடுத்துகிறார் இயக்குனர் சுசீந்திரன்.

இது கண்டிப்பாக சூரிக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கும் என தெரிகிறது.