திரைப்படங்களில் மிக முக்கியமானவர்கள் காமெடி நடிகர்கள் தான், ஹீரோக்களை ராசிபவர்களை போலவே ஒரு படத்தில் இடம் பெரும் காமெடி காட்சியை காண திரையரங்கம் செல்பவர்களும் உள்ளனர்.

அப்படி காமெடியில் கலக்கியவர்களில் நடிகர் செந்தில் மிக முக்கியமானவர், இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகளுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

கமல், ரஜினி, என பல முன்னனி நடிகர்கள் படங்களிலும் இவர் 1000 படங்களுக்குமேல் நடித்து விட்டனர்.

தற்போது இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு,’உன்னை தொட்டுக்கொல்லவா’,’தான சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரது இரண்டாவது மகன் சந்துரு சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம் , ஆனால் ஒரு நடிகராக அல்ல இயக்குனராக அறிமுகமாக உள்ளாராம்.

இதற்காக தற்போது அஜித் நடித்து விவேகம் படத்தில் இவர் சிறுத்தை சிவாவின் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அதே போல சில கதைகளையும் எழுதி வைத்துள்ளாராம், அதனால் கூடிய விரைவில் ஒரு முன்னணி நடிகரின் கால்ஷீட் கிடைத்தால் இயக்குனராக மாறிவிடுவர் சந்துரு என எதிர்பார்க்க படுகிறது.