Connect with us

Cinemapettai

sankar

Cinema News | சினிமா செய்திகள்

தனது குறையை வைத்து கிண்டல்.! திருமணத்திற்கு முன்பும் கூட கலாவிடம்.? உருக்கமாக பேசிய சங்கர்.!

தனது குறையை கிண்டல் செய்தவர்களும், கேலி செய்தவர்களையும் கண்டுகொள்ளாமல் தனது உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தி ரஜினி விஜயகாந்த் வடிவேலு என அனைவரிடமும் இணைந்து நடித்து தனது பெயரை சினிமாவில் பதித்தவர் தான் காமெடி கிங் காங் சங்கர்.

இப்பொழுது தனது மனைவி குழந்தை என சந்தோசமாக இருக்கும் சங்கர் தன் வாழ்வில் கட்டப்பட்டதையும் தனக்கு உதவிய நடிகர்களைப் பற்றியும் தற்பொழுது பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது” நான் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்துள்ளேன் குடும்பத்தின் கஷ்டம் சாப்பாட்டுக்கே வறுமை ஒரு வேளை சாப்பாட்டிற்கே போராட வேண்டிய நிலைமை, அதனால் அப்பாவுடன் இணைந்து குடும்ப பாரத்தை சுமக்க ஆரம்பித்தேன்.

sankar

sankar

அதேபோல் சின்னச் சின்னதாக நான் நடிப்பதைப் பார்த்து பள்ளி ஆசிரியர் ஒருவர் நீ சினிமாவிற்குப் போ நன்றாக வருவாய் என கூறினார், அதன் பிறகுதான் சென்னை வந்தேன் சென்னைக்கு வந்து என்னை எனது உயரத்தை வைத்து அனைவரும் கேலி செய்தார்கள் கிண்டல் அடித்தார்கள்.

ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்து பின்பு எனக்கு பாண்டியராஜன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது அந்த படத்தில் எனது திறமையை காட்டினேன் அதனை தொடர்ந்து தற்போது வரை 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன்.

அதேபோல் எனது வாழ்க்கையில் மிக முக்கிய நபர் என்றால் அது வடிவேல் சார் தான் அவர் எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார், அவரை சமீபத்தில் நான் அவரது வீட்டில் சந்தித்தேன் மேலும் அவரிடம் உங்கள் படத்திற்காக உங்களை திரையில் காண்பதற்காக பல மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறினேன்.

வடிவேல் சார் நாம் இணைந்து இரண்டு மூன்று படங்கள் பண்ணுவோம் என கூறினார், மேலும் எனது மனைவியை பற்றி கண்டிப்பாக நான் சொல்லியே ஆக வேண்டும், என் மனைவி பெயர் கலா நான் என்ன சொன்னாலும் அதை தட்டிக் கழிக்காமல் கேட்பாங்க அதனால்தான் நான் அதிக நேரம் குடும்பங்களுடன் குழந்தையுடன் நேரத்தை செலவு செய்கிறேன் .

sankar

sankar

எனது அம்மாவுக்கு எனக்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டும் என ஆசை, ஆனால் எங்க அப்பாவிற்கு இவனுக்கு எதற்கு திருமணம் என எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பார், ஒரு காலகட்டத்தில் திருமணமே வேண்டாம் என விரக்தியில் இருந்தேன், அப்பொழுதுதான் சொந்தத்தில் பொண்ணு கொடுக்க ஒருத்தர் சம்மதித்தார், ஆனால் தாலி கட்டுவதற்கு முன்பு கூட கலாவிடம் உனக்கு சம்மதம் தானே என கேட்டேன்.

இப்பொழுது எனக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள் இவர்களை நன்றாக வளர்க்க வேண்டும் அதேபோல் இவர்களை சினிமாத்துறையில் கொண்டுவர எனக்கு விருப்பமில்லை என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top